Gurunagar Social Service Association - Canada USA
Home
About Us
Contact Us
Join with us
Announcements
Gurunagar Social Service Association - Canada USA
Home
About Us
Contact Us
Join with us
Announcements
More
  • Home
  • About Us
  • Contact Us
  • Join with us
  • Announcements
  • Home
  • About Us
  • Contact Us
  • Join with us
  • Announcements
A group of six joyful children sitting and smiling together with hands joined.

குருநகர் சமூக சேவை அமைப்பு - கனடா அமெரிக்கா

மேலும் தெரிந்துக்கொள்ள

அமைப்பின் ஆரம்ப படிகள்

துவக்கம்

குருநகர் சமூக சேவை அமைப்பு - கனடா அமெரிக்கா அமைப்பானது 1996ஆம் ஆண்டு ஆரம்பமானது எவ்வாறெனில், 1970 மற்றும் 1980 களில் எமது குருநகர் ஊர் குடும்பங்கள், கனடாவிற்கு வந்து குடியேற்றம் அடைந்த குடும்பங்களை அழைத்து நட்பு பாராட்டி, விருந்துபசாரத்துடன் கடல் கடந்த உறவுகளை வளர்த்து கொண்டு வந்தனர். பிறகு படிப்படியாக பல குடும்பங்கள் இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்றுக்கொண்டதால், இந்த நிகழ்வை நமது சமுதாய முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, அனைவரையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த குருநகர் சமூக சேவை அமைப்பு - கனடா அமெரிக்க அமைப்பு. 


உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பு என்று நின்றுவிடாமல், அதை செயல்படுத்த அணைத்து குடும்பங்களும் மாதம் $10 நன்கொடையாக கொடுத்து, அதில் வரும் பணத்தை எமது ஊர் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், எளிய மக்களின் உதவிக்காகவும் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்து அதில் வெற்றியும் பெற்றோம்.  


முதலாவதாக எமது ஊர் வருங்கால சந்ததியினரின் கல்வியை மேம்படுத்த, ஆரம்ப கல்வி பிள்ளைகளை பள்ளியில் பதிந்து அவர்களுக்கான பள்ளி கட்டணங்களை எமது அமைப்பு ஏற்றுக்கொண்டது. அதோடு நின்று விடாமல் அவர்களின் சீருடை, புத்தக செலவுகள் என்று அனைத்தையும் எமது குழு ஏற்றுக்கொண்டு , எங்களின் சமூக தொண்டின் முதல் அடியை எடுத்து வைத்தது. அவர்களின் வாழ்வு மேலும் சிறக்க விளையாட்டு போட்டிகள், கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள், குழந்தைகள் தின கொண்டாட்டங்கள் என்று அணைத்து செலவுகளையும், ஏற்றுக்கொண்டு அவர்களின் வாழ்வில் மேலும் மகிழ்ச்சியை புகுத்தியது எமது அமைப்பு. அதுமட்டுமில்லாமல், தனிப்பட்ட நபருக்கோ, எதேனும் குடும்பத்திற்க்கோ உதவிகள் தேவைப்பட்டால், அதை அவர்கள் கடிதம் மூலமாக தெரிவிக்கும் பட்ச்சத்தில், அமைப்பில் உள்ள நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து அவர்களுக்கான உதவிகளையும் அமைப்பு செய்து வந்தனர்.  

குருநகர் சமூக சேவை அமைப்பின் வளர்ச்சி

பாராட்டுகளும் அங்கீகாரமும்

எமது குருநகர் அமைப்பின் செயல்பாடுகள் ஊர் மக்கள் மத்தியில் பரவி, மக்களிடம் எங்களுக்கான பாராட்டுகளும் அங்கீகாரமும் குவிய துவங்கியது. பல பள்ளிகள் கல்லூரிகள் என்று இளைய தலைமுறையின் முன்னேற்றத்திற்க்காக உதவிக்கரம் நீட்ட, எமது அமைப்பும் இயங்கிற உதவிகளை செய்து வந்தது. உதாரணமாக:


* சென்ட் ஜேம்ஸ் பள்ளி மாணவர்களுக்காக கால்பந்தாட்ட விளையாட்டு உபகாரணங்களை வழங்கியது.


* எமது ஊரின் பாடுமின் விளையாட்டு கழகத்திற்கு நிதி உதவி செய்தது 


என்று பட்டியல் நீண்டு கொண்டு சென்றாலும், ஊர் மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான தொலைநோக்கு திட்டங்களில் குருநகர் சமூக சேவை அமைப்பு தனது திட்டங்களை வகுக்க துவங்கியது.

பேரிடர் காலத்தில் குருநகர் சமூக சேவை அமைப்பு - கனடா அமெரிக்க

சுனாமி பேரிடரில் மக்களோடு மக்களாக

சுனாமி பேரிடரில் உறவுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் நேரில் சென்று மருத்துவம், உணவு, இருப்பிடம் என்று இரவு பகலாக பாதிக்கப்பட்டவர்களோடு தோளோடு தோள் கொடுத்து நின்றதை எமது ஊரு மக்கள் இன்றும் நன்றியோடு நினைவுகூர்ந்து நிற்கிறார்கள்.

கொரோனா உலக பேரிடரில் மக்களுக்கான சேவை

உலக பேரிடரான கொரோனா காலத்திலும், வணிகம், வாழ்வியல் பொருளாதாரம் எல்லாம் பெரிதும் முடங்கி கிடந்த நிலையில், பொது மக்களுக்காக மருத்துவம், உணவு, உடை, உறைவிடம், பொருளாதார உதவிகள் என்று குருநகர் மக்களோடு  நின்று அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றியது எமது அமைப்பின் மிகப்பெரிய சாதனையாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது. 

பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்லுதல்...

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, குருநகர் சமூக சேவை சங்கம் நம்பிக்கை மற்றும் மனிதநேயம் நிறைந்த ஒரு விளக்காக திகழ்கிறது. 2025 ஆம் ஆண்டு  கனடா மற்றும் அமெரிக்கா கிளைகள் துவங்கியதன் மூலம், எல்லைகளை தாண்டி சேவை செய்யும் எங்கள் முயற்சி மேலும் வலுவடைந்துள்ளது. அன்பு, ஒற்றுமை மற்றும் நிலைத்த முன்னேற்றம் ஆகிய மதிப்புகளை தலைமுறை தலைமுறையாக கடத்தி, “நாம் ஒன்றிணைந்தால், மாற்றத்தை உருவாக்க முடியும்” என்பதை நிரூபிக்கின்றோம்.

Copyright © 2025 Gurunagar Social Service Association - Canada USA - All Rights Reserved.


Powered by

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

Accept