
ககனிஸ்ரஸ் கிவன் இம்மனுவல் றஞ்சித் - சமூக சேவையில் பெரும் பார்வையைக் கொண்ட மனிதர். கல்வி, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதில் அவரது அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கது. கருணை நிறைந்த இதயமும், நோக்கமுள்ள சிந்தனையும் கொண்ட அவர், ஏழை மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மாற்றுவதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூக ஆதரவு மூலம் மனிதர்களை வலுவூட்டுவது அவரது முக்கிய நோக்கமாகும். ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்பு, மரியாதை மற்றும் நம்பிக்கை கிடைத்தால் மட்டுமே உண்மையான முன்னேற்றம் நிகழும் என்பதில் கனிஸ்டஸ் உறுதியாக நம்புகிறார் — இதுவே அவரது சேவை மற்றும் மாற்றத்தின் ஊக்கமூட்டும் பயணத்திற்கு வழிகாட்டியாக உள்ளது.
குருநகர் சமூக சேவை அமைப்பு - கனடா அமெரிக்கா அமைப்பானது, எமது ஊர் மக்களின் முன்னேற்ற பணிகளுக்காகவும், கனடா வாழ் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளுக்காகவும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது.
இதை உறுதி செய்ய :
* கோடைக்கால ஒன்றுக்கூடல்
* புனித யாகப்பர் திருவிழா ஒன்றுக்கூடல்
* கிறிஸ்துமஸ் ஒன்றுக்கூடல்
என்று ஒவ்வொரு வருடமும் ஒன்றுகூடி அந்தந்த காலக்கட்டத்தின் செயல்பாடுகளையும், எதிர்கால திட்டங்களை பற்றியும் கலந்தாலோசித்து ஒவ்வொரு வருடமும் எங்களை மெருகேற்றிக்கொண்டு வருகிறோம்.

புதிய சிந்தனைகள், செயல் திட்டங்கள் கொண்டு சிறப்பான பணிகளை முன்னெடுக்க ஒவ்வொரு ஆண்டும் கோடைக்கால ஒன்றுகூடலின் போது, எமது குழுவின் நிவாகிகள் மாற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நிர்வாக பொறுப்பினை திறம்பட முன்னெடுக்க :
நிர்வாக குழு உறுப்பினர்கள்
* தலைவர்
* செயலாளர்
* பொருளாளர்
* செயற்குழு உறுப்பினர்கள்
பொது மக்கள் உறவு மேம்பாட்டாளர்கள்
* செய்தி தொடர்பாளர்கள்
* கலைக்குழு உறுப்பினர்கள்
என்றும் திறன் வாய்ந்த இளைய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

எமது குருநகர் சமூக சேவை அமைப்பு - கனடா அமெரிக்காஅமைப்பானது 1996ஆம் வருடம் முதல் 2025ஆம் ஆண்டு வரை 29 ஆண்டுகளாக நிர்வாக குழு உறுப்பினர்கள், மாதாந்திர நன்கொடை கொடுத்து வரும் அமைப்பின் உறுப்பினர்கள் செயல்பாடுகள் மூலமாகவும், பயனாளிகளின் ஊக்கத்தினாலும் வெற்றிநடை போட்டு வருகிறது என்பதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்த அமைப்பின் செயல்பாடுகளை உலகளாவிய அளவில் முன்னெடுக்க தற்போதைய (2025) நிர்வாக செயற்குழு உறுப்பினர்களின் முன்னெடுப்பின் படி இந்த ஆண்டு கனடா நாட்டில் இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட உடன் எமது முக்கிய பணிகளாக :
* கனடா வாழ் உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது
* அடுத்த தலைமுறைக்கு இந்த அமைப்பின் கட்டமைப்பை கற்றுக்கொடுத்து, வழிநடத்தி, அவர்களிடம் இந்த அமைப்பின் முக்கியதுவத்தை ஒப்படைப்பது.
* இன்று வரை நடத்திவரும் சேவைகளை தொடர்ந்து செயல்படுத்துவது.
* புதிய தொலைநோக்கு திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்து, எமது சேவைகளை விரிப்படுத்துதல்.போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.